உலகம்
சீன – அமெரிக்க அதிபர்கள் சந்திப்பு
உலகின் இரு பெரும் பொருளாதார வல்லரசு நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளின் அதிபர்கள் இந்த ஆண்டின் இறுதியில் காணொலி ஊடாக சந்தித்து கலந்துரையாடவுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுவிற்சர்லாந்தில் அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் சீனாவின் உயர்மட்ட தூதுவர் ஆகியோரின் சந்திப்பு இடம்பெற்ற சில மணிநேரங்களில் அமெரிக்க சீன அதிபர்களின் சந்திப்பு தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு விவகாரங்கள் தொடர்பில் கருத்து வேறுபாடு நிலவி வருகின்ற நிலையில் இந்தச் சந்திப்பானது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது எனத் தெரிவிக்கப்படுகிறது.
காணொலி ஊடாக இந்தச் சந்திப்பை நடத்த இரு நாடுகளும் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்க அரச வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இற்த நிலையில் உரோமில் நடைபெறும் ஜி.20 மாநாட்டில் சீன அதிபர் கலந்து கொள்ளமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தால் அங்கு அமெரிக்க – சீன அதிபர்களிடையே சந்திப்பு இடம்பெற்றிருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login