உலகம்

அதிநவீன ஆயுதங்களுடன் தலிபான்களுக்கு ஆதரவாக ஆப்கானில் பேரணி

Published

on

தாலிபான்களின் ஆட்சிக்கு  ஆதரவாக ஆப்கனில் பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த பேரணியில் 1000 மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இப் பேரணியில் அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

ஆப்கானில் இருந்து அமெரிக்கப் படைகள் வெளியேறத் தொடங்கிய சில வாரங்களிலேயே ஆப்கானை தாலிபான்கள் மீண்டும் கைப்பற்றினர்.முன்பு நடத்தப்பட்ட ஆட்சியைப் போல் இன்றி  இந்த ஆட்சி அனைவரையும் உள்ளடக்கிய ஒரு ஆட்சியாக இருக்கும் என்றும் பெண்களுக்கு உரிமைகள் அளிக்கப்படும் என்றும் தலிபான்கள் தெரிவித்தனர்.

மேலும், பயங்கரவாதிகளுக்குக் கண்டிப்பாக ஆதரவு அளிக்கப்படமாட்டாது என்றும் தலிபான்கள் திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தனர். ஆயினும் , இப்போது வரை தலிபான்கள் சொன்னதைப் பின்பற்றியதாகத் தெரியவில்லை.

இதனால் சர்வதேச அளவில் பெரும்பாலான நாடுகள் தலிபான்களுடன் இணைந்து பணியாற்றுவதில் தயக்கம் காட்டி வருகின்றன. இந்தச் சூழலில் வடக்கு காபூலில் தலிபான்களின் ஆட்சிக்கான ஆதரவை உணர்த்தும் வகையில் முதல் முறையில் நடைபெற்ற பேரணி இதுவாகும் .

இப் பேரணியில் பங்கேற்ற அனைவரும் ஆண்களும் சிறுவர்களுமே என்பது குறிப்பிடத்தக்கது.பேரணியில் ராணுவ உடையில் துப்பாக்கிகளுடன் வந்த தலிபான் தலைவர்கள் மக்களிடையே பேசினர். தலிபான் மூத்த தலைவர்களும் கலந்துகொண்டனர்.

மேலும், ராக்கெட் லான்சர்கள் உள்ளிட்ட அதிநவீன ஆயுதங்களுடன் கூடிய ராணுவ அணிவகுப்பும் இதில் நடைபெற்றது. மேலும், ஆட்டம் பாட்டத்துடனான கொண்டாட்டங்களும்  நடைபெற்றன.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version