உலகம்

2 ஆயிரம் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு!

Published

on

தென்னமெரிக்க ஈகுவடார் நாட்டின் சிறையில் உள்ள 2000 ஆயிரம் சிறைக் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அவர்கள் விடுதலை செய்ய ஈகுவடோர் அரசு தீர்மானித்துள்ளது.

சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கையை குறைக்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது எனக் கூறப்படுகிறது.

குயாஸ் மாகாணத்தில் துறைமுக நகரமான குயாகுவில் உள்ள சிறையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரு தரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் பெரும் கலவரமாகி வெடித்தது.

அதில் இதுவரை 118 கைதிகள் உயிரிழந்துள்ளனர். அத்துடன் 79 கைதிகள் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த சிறைச்சாலையில் 39 ஆயிரம் கைதிகள் சிறைவைக்கப்பட்டுள்ளனர்.

அதிக எண்ணிக்கையில் கைதிகள் அடைக்கப்பட்டிருப்பதாலும் கைதிகளை கண்காணிப்பதற்கு போதிய அதிகாரிகள் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடாததே மோதல்கள் வன்முறையில் முடியக் காரணமாகியுள்ளது.

இதன் காரணமாக சிறையில் அடைபட்டுள்ள கைதிகளில் பெண்கள், வயதானோர், மாற்றுத்திறனாளிகள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் என 2000 ஆயிரம் பேரை பொதுமன்னிப்பு வழங்கி விடுதலை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

கைதிகளை குறைப்பதன் மூலம் பாதுகாப்பை அதிகரித்து மோதலை தவிர்க்கலாம் என அந்நாட்டு அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்படுகிறது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version