உலகம்
ஸ்பெயின் எரிமலை வெடிப்பு – பிரான்ஸ் நோக்கி மாசு மண்டலம்
ஸ்பெயின் நாட்டு கனெரித் தீவுகளில் எரிமலை வெடித்துள்ள நிலையில் அதிலிருந்து உமிழ்கின்ற மாசு கலந்த புகை மண்டலம் பிரான்ஸின் வான்பரப்பை நோக்கி நகர்கிறது என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனெரி தீவுக் கூட்டங்களில் ஒன்றாக La Palm தீவில் உள்ள கும்ப்ரே வீஜா எரிமலை கடந்த நில நாள்களாக வெடித்து தீப்பிளம்புகளையும் புகை மண்டலங்களையும் வெளிவிட்டு வருகின்றது.
இதில் அயல் இடங்களில் வசிக்கின்ற ஆயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்பு கருதி வெளியேற்றப்பட்டுள்ளனர். அந்தப் பகுதிகளை கரும்புகை மூடி மறைத்துள்ளது.
ஸ்பெயின் மற்றும் மொரோக்கோ நாடுகளுக்கு மேலே திரண்டுள்ள மாசு மண்டலம் அங்கிருந்து நகர்ந்து பல்லாயிரகணக்கான மைல்கள் கடந்து பிரான்ஸ் வான்பரப்பை நோக்கி வருகிறது எனத் தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவில் சல்பர் டயோக்சைட் கலந்த புகை மண்டலம் வளியோடு கலந்து வார இறுதியில் நாட்டின் வான்பரப்பினுள் பிரவேசிக்கத் தொடங்குகிறது எனவும் இதனால் அந்தப் பகுதிகளில் அமில மழை பொழிய வாய்ப்புள்ளது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
வளியில் இவற்றின் செறிவை பொறுத்து மனிதர்க்ள மற்றும் விலங்குகள், விவசாய நடவடிக்கைகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த வார இறுதியில் பிரான்ஸின் சில பகுதியில் இடி, மின்னல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் மழைநீரில் அமில செறிவு அதிகமாக இருக்கும் எனவும் எதிர்வு கூறப்படுகிறது.
You must be logged in to post a comment Login