உலகம்

தலிபான்கள் ஆட்சியின் புதிய தலைவர் நியமனம்!

Published

on

ஆப்கானிஸ்தானின் புதிய இடைக்கால அரசில் அங்கம் வகிப்பவர்களின் விவரத்தை தலிபான்கள் தலைமை தற்போது அறிவித்துள்ளது.

அதன்படி புதிய தலைவராக முல்லா முகமது ஹசன் அகுந்த் என்பவரை தலிபான் தலைமை முன்மொழிந்துள்ளது.

இவர் ஐக்கிய நாடுகள் சபையின் பயங்கரவாதிகள் பட்டியலில் இடம்பெற்றவராவர். தற்போது தலிபான் அமைப்பின் சக்திவாய்ந்த ரெஹ்பாரி ஷூரா குழுவின் தலைவராக இருக்கிறார். இந்த குழுதான் மிக முக்கியமான விவகாரங்களில் முடிவை எடுக்கும் அதிகாரம் கொண்டதாகக் காணப்படுகிறது.

முல்லா முகமது ஹசன் ஆப்கானிஸ்தானில் 1996 முதல் 2001 வரை நடந்த தலிபான்கள் அரசில் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் துணை பிரதமராகவும் இருந்தவர் .

 

 

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறிய நிலையில் தற்போது புதிய அரசை தலிபான்கள் நிறுவியுள்ளனர்.

இந்த நிலையில் தலைநகர் காபூலில் புதிய தற்காலிக அரசில் அங்கம் வகிப்போரின் விவரங்கள் வெளியாகியுள்ளன. முறைப்படி புதிய அரசு அமையும்வரை இவர்கள் அரசில் அங்கம் வகிப்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இடைக்கால பிரதமராக மெளலவி ஹெபடூலா அகூந்த்ஸாதா, துணைப் பிரதமராக மெளலவி கனீ பரதா், உள்துறை அமைச்சராக சிராஜூதீன் ஹக்கானி, பாதுகாப்பு அமைச்சராக மெளலவி யாகூப் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version