செய்திகள்

தென் அமெரிக்காவில் ஐடா புயல் – 41 பேர் பலி

Published

on

தென் அமெரிக்காவில் உருவாகியுள்ள வெப்பமண்டல புயலான ஐடா அங்கு நிலச்சரிவை ஏற்படுத்திய பின்னர் அதன் வலுவை இழந்துள்ளது.

புயல் அதன் வலுவை இழந்திருந்தாலும், அதன் ஈரப்பதத்தை கைவிடவில்லை. இதன் காரணமாக
அது வடகிழக்கு நோக்கி நகர்ந்தபோது, ​​நியூயோர்க் நகரத்தில் 80 மிமீ மழையை பொழிந்துள்ளது.

அங்கு சுமார் ஒரு மணி நேரம் கொட்டிய மழையால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

அமெரிக்காவின் வடகிழக்கு பகுதியில் வீசிய ஐடா புயல் காரணமாக குறைந்தது 41 பேர் பலியாகிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அவர்களில் குறைந்தது 23 பேர் நியூஜெர்சியில் வசிப்பவர்கள் என்று கவர்னர் பில் மர்பி அறிவித்துள்ளார். மேலும் பெரும்பாலானோர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தமது வாகனங்களில் சிக்கிக்கொண்டனர்.

இதேவேளை, நியூயோர்க்கில் குறைந்தது 14 பேர் தமது அடித்தள குடியிருப்பில் சிக்கி நீரில் மூழ்கி இறந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், கனெக்டிகட்டில் ஒருவரும், பென்சில்வேனியாவின் பிலடெல்பியா அருகே மூன்று பேரும் இந்த வெள்ளப்பெருக்கால் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

source : Storm Ida death toll climbs to 41 across four states as floods continue – BBC News

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version