உலகம்
புதிதாக உருவாகிறது மியு திரிபு வைரஸ்!!
உருமாற்றங்களைப் பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் அடுத்து மியு எனும் பிறழ்வில் உருமாற்றம் பெற்றுள்ளது என உலக சுகாதார ஸ்தாபனம் தகவல் வெளியிட்டுள்ளது.
தடுப்பூசிகளுக்கு எதிர்வினையாற்றும் இந்த ஆபத்தான வைரஸ் திரிபின் வளர்ச்சி குறித்து ஆய்வு மற்றும் மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சீனாவில் உருவாகிய கொரோனா வைரஸ் தற்போது அல்பா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ் என பல்வேறு வகையில் உருமாற்றம் பெற்று உலக நாடுகளை அச்சுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கொலம்பியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட இந்த மியு வகை உருமாற்ற வைரஸ், தற்போது தென் அமெரிக்கா, தென்னாபிரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவி வருகின்றது.
You must be logged in to post a comment Login