செய்திகள்
கொரோனா சாவு 215 – தொற்று 3828!
நாட்டில் கொரோனாத் தொற்றால் நேற்றைய தினம் 215 பேர் உயிரிழந்துள்ளனர் என அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
115 ஆண்களும் 100 பெண்களும் உயிரிழந்தவர்களில் உள்ளடங்குகின்றனர்.
இதற்கமைய நாட்டில் பதிவாகிய மொத்த கொரோனா இறப்புக்களின் எண்ணிக்கை 9 ஆயிரத்து 400 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை இன்றைய தினம் கொரோனாத் தொற்றால் 3 ஆயிரத்து 828 பேர் தொற்றாளர்களாக இதுவரையில் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதற்கமைய நாட்டில் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 லட்சத்து 44 ஆயிரத்து 130 ஆகும். இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களின் 3 லட்சத்து 76 ஆயிரத்து 216 பேர் குணமடைந்துள்ளமையுடன் 58 ஆயிரத்து 729 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
You must be logged in to post a comment Login