உலகம்

சீனாவைப் புரட்டிப் போடும் கன மழை – பல இடங்கள் வெள்ளத்தில்!!

Published

on

சீனாவைப் புரட்டிப் போடும் கன மழை – பல இடங்கள் வெள்ளத்தில்!!

சீனாவில் கடந்த சில தினங்களாக வரலாறு காணாத அளவுக்கு பருவமழை பெய்துவருவதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நேற்று சீனாவின் மத்திய மாகாணங்களில் மிக பலத்த மழை பெய்தது. ஹூபெய் நகரம் மழை வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.

இந்த மாகாணத்தில் உள்ள மக்கள் வெள்ளத்தில் சிக்கி தவித்தபடி உள்ளனர். ஹூபெய் மாகாணத்தில் நேற்றும், இன்றும் 503 மி.மீ. மழை பெய்திருக்கின்றது என்று தெரியவ ந்துள்ளது.

இதனால் அந்த மாகாணத்தில் உள்ள முக்கிய நகரங்களில் சுமார் 4 மீற்றர் உயரத்துக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. 8 ஆயிரம் பேர் ஆபத்தான பகுதியில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர்.

பலத்த மழை காரணமாக 21 பேர் உயிரிழந்துள்ளனர். 4 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றும் மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கடந்த ஒரு மாதமாக சீனாவில் பெய்து வரும் பலத்த மழையால் இதுவரை 300க்கும் மேற்பட்டவர்கள் உயிரிந்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version