விளையாட்டு

ஜ.பி.எல் பல கெடுபிடிகளுக்கு மத்தியில் இம்மாதம் 24ல் ஆரம்பம்!!

Published

on

10 அணிகள் பங்கேற்கும் 15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடர் வருகிற 24-ந் தேதி தொடங்கி மே 29-ந் தேதி வரை நடக்கிறது.

போட்டி அட்டவணை நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இந்த சீசனில் புதியதாக களம் இறங்கும் லக்னோ அணிக்கு லோகேஷ் ராகுலும், அகமதாபாத் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு கடந்த சீசன்களில் வீராட் கோலி கேப்டனாக செயல்பட்டு வந்தார். சமீபத்தில் அவர் பெங்களூர் அணி கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அணியில் ஒரு வீரராக அவர் தொடருகிறார்.

பெங்களூர் அணியின் புதிய கேப்டன் இதுவரை அறிவிக்கப்படவில்லை. பெங்களூர் அணி நிர்வாகம்தான் இன்னும் கேப்டன் யார் என்பதை அறிவிக்காமல் உள்ளது.

இந்த நிலையில் பெங்களூர் அணியின் புதிய கேப்டன் யார் என்பது வருகிற 12-ந் தேதி மாலை அறிவிக்கப்படுகிறது.

அப்போது அணியின் புதிய ஜெர்சியும் அறிமுகப் படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான பாப் டுபெலிசிசுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர் பெங்களூர் அணியின் புதிய கேப்டனாக அறிவிக்கப்படவுள்ளார்.

பெங்களூர் அணியில் இடம் பெற்றுள்ள ஆஸ்திரேலியா ஆல்-ரவுண்டர் மேக்ஸ் வெல்லுக்கு அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அணி நிர்வாகம், டுபிளசிஸை தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

பெங்களூர் அணி தனது தொடக்க ஆட்டத்தில் 27-ந் தேதி பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.

#SportsNews

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version