விளையாட்டு

இந்திய அணி தலைமை தொடர்பில் ஷமியின் சர்ச்சைக்குரிய கருத்து!!

Published

on

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணிக்கு வலுவான கேப்டன் தேவை என இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கருத்துத் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க அணியிடம் 2-1 என்ற கணக்கில் இந்திய டெஸ்ட் அணி தோல்வி அடைந்த நிலையில், கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

இந்நிலையில் அடுத்த இந்திய டெஸ்ட் அணி கேப்டன் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் புதிய கேப்டன் குறித்து இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறுகையில்,

அணிக்கு நிச்சயமாக ஒரு தலைவர் தேவை. எங்கள் முதல் தொடர் சொந்த மண்ணில் நடைபெறுவது சிறப்பு.

என்னைப்பொறுத்தவரைக்கும், நான் எப்படி விளையாடுகிறேன் மற்றும் ஒட்டுமொத்தமாக பந்துவீச்சு எவ்வாறு செயல்படுகிறது என்பதில் மட்டுமே எனது முழுக் கவனத்தையும் செலுத்துவேன்.

கேப்டன் பதவியை யார் எடுப்பது என்பது பற்றி நான் சிந்திக்கவில்லை. செயற்திறனில் அதிக கவனம் செலுத்துவதும், பெரிய பொறுப்பை ஏற்றுக்கொள்வதும் தனி நபர் பொறுப்பாகும்.

அது நாம் எதிர்பார்க்கும் முடிவுகளுக்கு வழிவகுக்கும் என்று இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சமி கூறியுள்ளார்.

#Sports

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version