பிராந்தியம்

ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் புதிய திட்டம்!!

Published

on

பண்டத்தரிப்பு ஜசிந்தா பாடசாலையின் இலவச கல்வி அமைப்பு சம்பந்தமான கலந்துரையாடலும் போட்டோ பிரதி இயந்திரம் வழங்கும் வைபவமும் நேற்றையதினம் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இ – கல்வி தொண்டு நிறுவன நிறுவுனர் முரளிதரன் (அவுஸ்ரேலியா) கருத்து வெளியிடுகையில்,

பெற்றோர்களுடைய பங்கு இல்லாமல் மாணவர்களுடைய கல்வியில் முன்னேற்றத்தை காட்ட முடியாது. நாடு தழுவிய ரீதியில் வடக்கு கிழக்கு மலையகம் என அனைத்து பிரதேசங்களிலும் எமது திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் பண்டத்தரிப்பு ஜெசிந்தா மகா வித்தியாலயத்தில் முதலாவது இ-கல்வி மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்பிரதேச மாணவர்களின் கல்வியில் பாரிய முன்னேற்றத்தை இது ஏற்படுத்தும் என நம்புகின்றேன்.

எமது திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு ஒரு ஆசிரியர் என்ற வகையில் இணைப்பதே நோக்கம். அது வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கு கடந்த வருட பெறுபேறுகள் சான்றாக அமைகின்றன.

அடுத்தகட்டமாக பாடசாலை மாணவர்களின் வரவுகள் உறுதிப்படுத்தவேண்டும். இதற்கு பெற்றோர்கள் பொறுப்பேற்க வேண்டும்.

அடுத்த பொதுப்பரீட்சை பெறுபேறுகள் வலிகாமம் கல்வி வலயத்தை உயர்நிலைக்கு இட்டு செல்லும், இதற்கு வலயக்கல்வி பணிப்பாளர், அதிபர், ஆசிரியர் சிறப்பான சேவையை வழங்கி வருகின்றனர் என்றார்.

குறித்த நிகழ்வில் விக்டோரியா பழைய மாணவர் சங்கத்தினரால் பாடசாலைக்கு போட்டோ பிரதி இயந்திரமும் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் குறித்த நிகழ்வில் வலிகாமம் வலயக்கல்வி பணிப்பாளர், சங்கானை சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி பணிப்பாளர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர் என பலரும் கலந்து கொண்டனர்.

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version