பிராந்தியம்

நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து முன்பள்ளி ஆசிரியர்கள் கவனயீர்ப்பு!!

Published

on

வடக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்கள் சம்பள உயர்வு கோரியும் நிரந்தர நியமனம் வழங்கக்கோரியும் யாழ்ப்பாணத்தில் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினர்.

யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்திற்கு முன்பாகவும் அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

கடந்த 30 வருடங்களுக்கு மேலாகவும் அதற்கு உட்பட்ட காலப்பகுதியிலும் முன்பள்ளி ஆசிரியர்களாக கடமையாற்றியிருந்தவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவாக ரூபா 6000 மாத்திரமே வழங்கப்படுவதாகவும் சம்பள உயர்வு அதிகரிக்கப்பட வேண்டும் எனக்கோரி குறித்தஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது

குறித்த ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் ஆதரவு வழங்கினர் ஆர்ப்பாட்டக்காரர்களின் இடத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து அரசாங்க அதிபரிடம் முன்பள்ளி ஆசிரியர்களால் மகஜர் கையளிக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் கோசமிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வடக்கு மாகாண ஆளுநர் கள விஜயம் ஒன்றை மேற்கொண்டு வவுனியாவிற்குச் சென்றதன் காரணமாக இன்றைய தினம் சந்திக்க முடியாது என பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் தெரிவித்ததாக ஆளுநர் அலுவலகத்திற்குச் சென்ற முன்பள்ளியின் ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டார்.

இருப்பினும் ஆளுநரின் செயலாளர் தம்மைச் வந்து சந்திக்க வேண்டும் எனக்கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

#SrilankaNews

 

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version