பிராந்தியம்

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட இருவர் கைது!!

Published

on

யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் கசிப்பு, கோடா மற்றும் பணம் உள்ளிட்டவை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

இதன்போது 80 லீட்டர் கசிப்பு, 17 பீப்பாய் கோடா மற்றும் 21 லட்சத்தி 87 ஆயிரத்து ஐநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய் பணத்தொகையும் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டுளளனர்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏழாலை பகுதியில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனை இடம்பெறுவதாக காங்கேசந்துறைக்கு பொறுப்பான சிரஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தெல்லிப்பளை பொலிசார் கடந்த முதலாம் திகதி காலை சம்பவ இடத்திற்கு விரைந்து குறித்த பகுதியில் மறைந்து இருந்து நடவடிக்கைகளை ஆராய்ந்த நிலையில் அன்று இரவே 24 வயது மற்றும் 25 வயதான இரண்டு சந்தேகநபர்களை கைது செய்தனர்.

இதனையடுத்து பாழடைந்த வீடு ஒன்றில் உற்பத்தி ஈடுபடுத்தப்பட்டிருந்த 80 லீற்றர் கசிப்பினையும் 17 பீப்பாய் கோடாவையும் கைப்பற்றினர்.

தொடர்ந்து குறித்த பாழடைந்த வீட்டிற்கு அண்மையில் காணப்பட்ட பற்றை காட்டினுள்ளும் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொலிஸார் மறைத்து வைக்கப்பட்டிருந்த 21 லட்சத்து 87 ஆயிரத்து ஐநூற்றி ஐம்பத்தி ஐந்து ரூபாய் பணத்தையும் தெல்லிப்பழை பொலிஸார் கைப்பற்றினர்.

இதனை அடுத்து குறித்த இரண்டு இளைஞர்களுக்கு எதிராகவும் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா முன்னிலையில் கடந்த 2ம் திகதி முற்படுத்திய நிலையில் சந்தேகநபர்களை எதிர்வரும் 10 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version