இலங்கை

ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

Published

on

ஏழு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் ஏழு மாவட்டங்களுக்கு உயர் அபாய நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை இன்று (27.09.2023) முதல் அடுத்த சில நாட்களுக்கு சற்று அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

மேலும், மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கடும் மழை பொழிய கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அபாய முன்னெச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கம்பஹா, கேகாலை, கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு உயர் அபாய நிலை (சிவப்பு) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தென்மேற்கு பருவமழை தொடர்வதால், நாட்டின் தென்மேற்கு பகுதியில் மழையுடனான காலநிலை தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.

Exit mobile version