இலங்கை
தங்க விலை அதிகரிப்பு!
தங்க விலை அதிகரிப்பு!
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம்(24.08.2023) தங்கத்தின் விலை மேலும் அதிகரித்துள்ளது.
மத்திய வங்கியின் தகவல்
இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவல்களின் படி, இன்றைய தினம் தங்க அவுன்ஸின் விலையானது 621,729 ரூபாவாக பதிவாகியுள்ளது.
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இது பாரிய அதிகரிப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய தங்க நிலவரம்
இதேவேளை, சந்தை நிலவரங்களின் படி இன்றையதினம் தங்க அவுன்ஸின் விலை 622,974 ரூபாவாக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 21,980 ரூபாவாக இன்று பதிவாகியுள்ளதுடன், 24 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 175,800 ரூபாவாக பதிவாகியுள்ளது.
22 கரட் தங்கப் பவுணொன்றின் இன்றைய விலை 161,200 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 20,150 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை, 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 19,240 ரூபாவாகவும், 21 கரட் தங்கப் பவுணொன்றின் விலை 153,900 ரூபாவாகவும் இன்றையதினம் பதிவாகியுள்ளது.
எனினும் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த விலைகளில் இருந்து மாற்றம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்! - tamilnaadi.com