இலங்கை

இலங்கையில் பிரபுகளின் பாதுகாப்புக்காக பெருந்தொகை பொலிஸார்

Published

on

இலங்கையில் பிரபுகளின் பாதுகாப்புக்காக பெருந்தொகை பொலிஸார்

நாட்டின் பிரபுகளின் பாதுகாப்பிற்காக 7693 பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர்களில் 563 பேர் அமைச்சர்களுக்கும், 1811 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காகவும் பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்காத உயரதிகாரிகளுக்காக 2176 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர்குறிப்பிட்டுள்ளார்.

ஓய்வுபெற்ற ஜனாதிபதிகள், முன்னாள் பிரதி அமைச்சர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், ஆளுநர்கள், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர், ஓய்வுபெற்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் எனப் பல பிரிவுகள் நாடாளுமன்ற உறுப்பினர் அல்லாத உயரடுக்கு பிரிவைச் சேர்ந்தவர்கள் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அமைச்சரின் தகவலுக்கமைய, பெண் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கை தற்போது 10085 ஆகும், அதில் 5810 பொலிஸ் கான்ஸ்டபிள்கள். 4 பிரதி பொலிஸ் மா அதிபர்கள் மற்றும் 5 மூத்த பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உள்ளனர்.

Exit mobile version