அரசியல்

ரணிலுக்கும் பஸிலுக்கும் சஜித் சவால்

Published

on

ரணிலுக்கும் பஸிலுக்கும் சஜித் சவால்

வாய்ச்சவடால் விட வேண்டாம் துணிவு இருந்தால் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்திக் காட்டுங்கள் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிறுவுநர் பஸில் ராஜபக்சவுக்கும் சவால் விடுத்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ.

‘நாட்டை மீண்டும் இருண்ட யுகத்துக்குள் கொண்டு செல்லத் திரைமறைவில் நடக்கும் ஆட்சிக் கவிழ்ப்புச் சூழ்ச்சிகள் தவிடுபொடியாகும்’ என்று ரணில் விக்ரமசிங்க தெரிவித்திருந்தார்.

அதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் உள்ளிட்ட அனைத்துத் தேர்தல்களையும் எந்நேரமும் எதிர்கொள்ள மொட்டுக் கட்சி தயாராகவுள்ளது என்று பஸில் ராஜபக்ச கூறியிருந்தார்.

மேற்படி இருவரினதும் கருத்துக்களுக்குச் சஜித் பிரேமதாஸ பதில் வழங்கும்போது,

“தேசிய ரீதியில் தேர்தல் ஒன்று நடந்தால் ரணில் – மொட்டு அரசு கவிழ்வது உறுதி. இதைச் சமாளிக்கவே ஜனாதிபதி ரணிலும், மொட்டுவின் உரிமையாளர் பஸிலும் வாய்ச்சவடால் விடுகின்றனர்.

அவர்களிடம் நாம் கேட்டுக்கொள்வது என்னவெனில், வாய்ச்சவடால் விட வேண்டாம்; துணிவு இருந்தால் தேர்தல் ஒன்றை உடனடியாக நடத்திக் காட்டுங்கள். அந்தத் தேர்தலில் இவர்களின் முகத்திரை கிழியும். மக்களின் ஆணை எமக்குக் கிடைக்கும் என குறிப்பிட்டார்.

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version