இலங்கை

ரயில் நிலையத்தில் தாயிற்கும் மகளுக்கு நேர்ந்த அவமானம்

Published

on

ரயில் நிலையத்தில் தாயிற்கும் மகளுக்கு நேர்ந்த அவமானம்

கம்பஹா பகுதியில் உள்ள ரயில் நிலைய முகாமையாளர் மற்றும் பயணச்சீட்டு பரிசோதிக்கும் அதிகாரிக்கு எதிராக பெண் ஒருவர் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இளம் தாயும் அவரது 11 வயது மகளும் கம்பஹா ரயில் நிலையத்தில் இறங்கியுள்ளனர்.

வாசலில் இருந்த ரயில் டிக்கெட் சோதனை அதிகாரி, டிக்கெட்டைக் கேட்டபோது வழங்குவதற்கு சற்று தாமதமாகியுள்ளது. இதனால் பயணிகள் முன்னிலையில் அவமானகரமான முறையில் பகிரங்கமாகத் திட்டியுள்ளார்.

இது குறித்து ஸ்டேஷன் மாஸ்டரிடம் முறைப்பாடு செய்ய சென்றபோது, ​​அவரும் தன்னை இதேபோல் பகிரங்கமாக திட்டிவிட்டு, மீண்டும் நிலையத்திற்கு வர கூடாதென மிரட்டியதாக பொலிஸாரிடம் குறித்த பெண் முறைப்பாடு செய்துள்ளார்.

ஸ்டேஷன் மாஸ்டர் தனது கையடக்கத் தொலைபேசியில் தன்னைப் புகைப்படம் எடுத்ததாகவும், சம்பவத்தை தனது கையடக்கத் தொலைபேசியில் வீடியோவாக எடுத்ததாகவும் அந்தப் பெண் பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version