இலங்கை
நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி
நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ள இறக்குமதி வரி
ஒரு கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
இந்த இறக்குமதி வரி நேற்று (17) இரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய ஒரு கிலோ சோளத்திற்கு விதிக்கப்பட்ட 75 ரூபா இறக்குமதி வரி 25 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளது.
மக்காச்சோளத்தை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் கால்நடை தீவனத்தின் விலையை குறைப்பதே இதன் நோக்கமாகும் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login