இலங்கை

விகாரையின் பணிகளை இடைநிறுத்திய ஆளுநர்! தொடரும் அழுத்தம்

Published

on

விகாரையின் பணிகளை இடைநிறுத்திய ஆளுநர்! தொடரும் அழுத்தம்

திருகோணமலை – நிலாவெளி பெரியகுளம் பகுதியில் நிர்மாணிக்கப்படவிருந்த பௌத்த விகாரையின் நிர்மாண பணிகளை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் இடைநிறுத்தியுள்ளார்.

பௌத்த விகாரையின் நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி பொதுமக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வந்த நிலையில், இனமுரண்பாடு ஏற்படும் என கிழக்கு மாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து, விகாரையின் நிர்மாண பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.

இது தொடர்பாக அரசியல்வாதிகள் பலர் தொடர்ச்சியாக அழுத்தங்களை பிரயோகித்து வந்த நிலையில், தனது முடிவில் உறுதியாக உள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பலாங்கொடை மிரிஷ்வத்த தம்மானந்த பிரிவென விகாரையின் கிளையான பலப்பிட்டிய அம்பருகாராமய விகாரையின் கிளை விகாரையான நிலாவெளியில் அமைக்கப்படவிருந்த விகாரை தொடர்பாக, உரிய விகாரைகளுக்கு சென்று, அங்குள்ள “விகாராதிபதிகளை சந்தித்து இப்பிரச்சினை குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் விளக்கமளித்துள்ளார்.

மேலும், விகாரையின் விகாராதிபதி விமல தம்மா மஹாநாயக்க தேரரை சந்தித்து கிழக்கு மாகாண ஆளுநர் என்ற வகையில் விகாரை அமைப்பதால் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும் ஆளுநர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

நிலாவெளி, இலுப்பை குளம் பகுதி மக்களின் ஆதரவுடன் விகாரை அமைக்கப்படாமல், எதிர்ப்புக்கு மத்தியில் விகாரை அமைக்கப்படும் சந்தர்ப்பத்தில் இனங்களுக்கிடையிலான முறுகல் நிலை ஏற்படுவதினை தடுக்க ஆளுநர் என்ற வகையில் தனது கடமையை செய்துள்ளதாகவும் ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.

எனவே இவ்விடயம் தொடர்பாக அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி சுமூகமான தீர்வினை பெற்று தருவதன் மூலம் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை பலப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

 

1 Comment

  1. Pingback: கிழக்கு மாகாண ஆளுநருக்கு அதிகாரம் இல்லை! - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version