இலங்கை
அம்பாறை மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
அம்பாறை மீனவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
இலங்கையில் திடீர் காலநிலை மாற்றம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் கல்முனை பிராந்திய கடற்கரைகளில் கீரி மீன்கள் அதிகளவான பிடிபடுகின்றன.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மூன்று வகையான மீன்களான வளையா, சூரை, கிளவல்லா மீன்கள் என கரைவலைகள் மூலம் பிடிக்கப்பட்டு பல இலட்சம் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு மருதமுனை சாய்ந்தமருது மற்றும் கல்முனை பகுதிகளில் கீரி இன மீன்கள் இன்றைய தினம் (15-08-2023) அதிகளவாக கரைவலைகளுக்கு பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
குறித்த கீரி மீன்களின் பெறுமதி 1 கிலோ சுமார் 400 முதல் 500 வரை விற்பனை செய்யப்பட்டுகின்றன.
இதேவேளை இவ்வாறு பிடிக்கப்படும் மீன்களினால் ஒரு மீனவரின் நாள் வருமானமாக 10 முதல் 20 இலட்சமாகவும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது மருதமுனை கல்முனை கடற்கரையில் கரை வலை மற்றும் ஆழ்கடல் மீன்பிடி தூண்டில் என்பன தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்ற நிலையில் கரைவலை மீனவர்களுக்கு இவ்வாறான சிறிய பாரிய மீன்கள் தொகுதியாக பிடிபடுகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
மேலும், கிளவால் வளையா சூரை போன்ற மீன்கள் விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி வளையா மீன் 1 கிலோ 1600 ருபாவாகவும் கிளவால் 1 கிலோ 2000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: இலங்கையில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் - tamilnaadi.com
Pingback: குளித்துக் கொண்டிருந்தவரை சுட்டுக் கொலை செய்த நபர்கள் - tamilnaadi.com