இலங்கை
இலங்கை வரலாற்றில் அறிமுகமாகும் அதிநவீன பேருந்து சேவை
இலங்கை வரலாற்றில் அறிமுகமாகும் அதிநவீன பேருந்து சேவை
கொழும்பு நகரை மையமாக கொண்டு பயணிகள் எழுந்து நின்று பயணிக்கும் வகையில் சொகுசு பேருந்து சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வாகன இறக்குமதி தடைகள் நீக்கப்பட்டவுடன் இந்த பேருந்துகளை கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான யோசனை போக்குவரத்து அமைச்சுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், இதற்கு மேலதிகமாக பேருந்துகளை இறக்குமதி செய்வது தொடர்பான கடனுதவிகளை பெற்றுக்கொள்ள வங்கிகளுடன் தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
வரலாற்றில் முதன்முறையாக இவ்வாறான பேருந்து இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளதாகவும், இந்த பேருந்தில் 80 பயணிகளை ஏற்றிச் செல்ல முடியும் எனவும், 24 பயணிகளுக்கு மாத்திரமே இருக்கைகள் உள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கையில் பயன்படுத்தப்படும் எந்தவொரு வங்கி அட்டையிலும் கட்டணத்தை செலுத்தக்கூடிய அத்தகைய உபகரணங்களை இந்த பேருந்துகளில் பொருத்துவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பேருந்துகளில் பயணிக்கும் மக்களுக்கு சில விசேட சலுகைகளை வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login