இலங்கை

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்து – மூவர் பலி

Published

on

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் விபத்து – மூவர் பலி

மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஏ-9 வீதி பனிச்சங்குளம் பகுதியில் இன்று அதிகாலை மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கியதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

அதே திசையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் பின்பகுதியில் வான் மோதியதிலேயே குறித்த லொறிக்கு முன்னால் சென்ற மற்றுமொரு லொறியுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது பின்னால் இருந்த லொறியின் சாரதி வாகனத்தை விட்டு இறங்கியதில் இரண்டு லொறிகளில் சிக்கி பலத்த காயங்களுக்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

லொறியின் பின்பகுதியில் பயணித்த ஒருவரும், வானின் முன் இருக்கையில் பயணித்த நபரும் பலத்த காயங்களுக்கு உள்ளாகி மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளனர்.

மேலும், வானில் பயணித்த மூன்று பெண்களும், லொறியில் பயணித்த ஆண் ஒருவரும் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், லொறியில் பயணித்த மூன்று ஆண்கள் மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முல்லேரியா, வெல்லம்பிட்டி மற்றும் யாழ்ப்பாணத்தை சேர்ந்த 38, 46 மற்றும் 58 வயதுடையவர்களே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர். விபத்து தொடர்பில் வான் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

9 Comments

  1. Pingback: யாழில் சிறுமியுடன் திருமணம்; பெற்றோருடன் கைது - tamilnaadi.com

  2. Pingback: யாழ்.மத்திய பேருந்து நிலையம் புதிய மைல் கல் - tamilnaadi.com

  3. Pingback: 33 மாணவர்கள் அதிவிசேட சித்தி: யாழ்.இந்துக் கல்லூரி சாதனை - tamilnaadi.com

  4. Pingback: யாழில் வித்தியாசமான சாதனை படைத்துள்ள இளைஞன் - tamilnaadi.com

  5. Pingback: யாழில் பல இலட்சம் ரூபாவுக்கு மாம்பழத்தை வாங்கிய பெண் - tamilnaadi.com

  6. Pingback: சுவிட்சர்லாந்தின் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள யாழ் இளைஞன் - tamilnaadi.com

  7. Pingback: அக்கரைப்பற்றில் திலீபனின் வாகன ஊர்தி பவனியை மறித்து ஆர்ப்பாட்டம் - tamilnaadi.com

  8. Pingback: யாழில் தவறான முடிவெடுத்து பெண் உயிரிழப்பு - tamilnaadi.com

  9. Pingback: யாழ். பலாலி விமான நிலையம் தொடர்பில் நடவடிக்கை - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version