இலங்கை
இளம் பெண்ணின் விபரீத முடிவு!
இளம் பெண்ணின் விபரீத முடிவு!
கண்டியில் இருந்து பதுளை நோக்கி சென்ற சரக்கு தொடருந்தில் பாய்ந்து இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (09.08.2023) காலை இடம்பெற்றுள்ளது.
தலவாக்கலை டயகம பிரதேசத்தில் வசித்து வந்த கணபதி அனுஷா தர்ஷனி என்ற 28 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த யுவதி ஹட்டனில் உள்ள தனியார் நிதி நிறுவனமொன்றில் பணியாற்றியவர் என தெரியவந்துள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இந்த யுவதி, இளைஞர் ஒருவருடன் 5 வருடங்களாக காதல் தொடர்பு வைத்திருந்ததாக தெரியவந்துள்ளது.
அதன்படி, இன்று காலை தன்னை வந்து சந்திக்குமாறு உயிரிழந்த யுவதி இளைஞனுக்கு தொலைபேசியில் தெரிவித்ததாகவும், அதற்கு அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்து அவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுவதியின் சடலம் அவரது காதலனால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், பிரேத பரிசோதனைக்காக சடலம் டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login