இலங்கை

இலங்கையில் பிறந்த சிசுவை வீதியில் வீசிய தம்பதிகள்

Published

on

இலங்கையில் பிறந்த சிசுவை வீதியில் வீசிய தம்பதிகள்

பிறந்த சிசுவை வீதிக்கு கொண்டு வந்து வீசிய கணவன் மனைவியை முல்லேரியா பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

முல்லேரியா பண்டார மாவத்தை களனிமுல்ல தெருவில் உள்ள அவரது வீட்டில் செவ்வாய்க்கிழமை (8) இரவு சிசுவை பெற்றெடுத்துள்ளார்.

அதன் பின்னர், சிசுவை கொன்று வீதிக்கு கொண்டு வீசியுள்ளனர் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

இரத்தக் கறைகளைத் தொடர்ந்து சென்ற பொலிஸார் சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்குச் சென்று ஜோடியை கைது செய்துள்ளனர்.

கைதான கணவனும் மனைவியும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட பெண், பொலிஸ் பாதுகாப்பின் கீழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் , அக்குழந்தையின் தந்தையென கூறப்படும் நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version