இலங்கை
வேலன் சுவாமிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
வேலன் சுவாமிகளுக்கு நீதிமன்றம் அழைப்பாணை
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மக்கள் பேரரெழுச்சி இயக்கத்தின் இணை ஒருங்கிணைப்பாளர் தவத்திரு வேலன் சுவாமிகளுக்கு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் (07.08.2023) காலை 9 மணிக்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த அழைப்பாணை கிளிநொச்சி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியால் ஒப்பமிட்டு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
சட்டமுறையற்ற போராட்டம் நடைபெற்றுள்ளது என தெரிவித்தே குறித்த அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளது.
அத்துடன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசிய கட்சியின் பொது செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கும் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login