இலங்கை
ரணில் விக்ரமசிங்கவினால் அதிர்ஷ்டசாலிகளாக மாறியுள்ள இலங்கையர்கள்
ரணில் விக்ரமசிங்கவினால் அதிர்ஷ்டசாலிகளாக மாறியுள்ள இலங்கையர்கள்
வீழ்ந்திருந்த தேசத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க இருந்தமையிட்டு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தேசிய சொத்தாகவே ரணில் விக்ரமசிங்க எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறார் என ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார்.
நாவுல பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டை விழுந்த இடத்தல் இருந்து மீண்டும் தூக்கி வைப்பதாக இருந்தால், எனக்கு அனைவரதும் ஒத்துழைப்பு அவசியமாகும் என்றே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாட்டை பொறுப்பேற்றவுடன் தெரிவித்தார்.
யாரையும் கைவிட்டு இந்த பயணத்தை செல்ல முடியாது. வைராக்கியம், குராேதம், பொறாமை பட்டுக்கொண்டு இந்த நாட்டை உலகுக்கு முன்னால் தூக்கி வைக்க முடியாது.
அத்துடன் நாங்கள் இன, மாத, குலம் என பிரிந்தோம். அதனால் நாடு என்றவகையில் நாங்கள் பின்னால் சென்றோம். தற்போது அந்த நிலைமையை மாற்ற வேண்டும். நாங்கள் மிகவும் கஷ்டமான காலத்தையே தாண்டினோம். அந்த கஷ்டமான காலத்தை தாண்டி தற்போது முன்னால் வந்திருக்கிறோம்.
எங்களுக்கு எதிர்காலம் தேவை என்றால், எங்கள் பிள்ளைகளுக்கு எதிர்காலம் தேவை என்றால் நாங்கள் தூரநோக்குடன் சிந்தித்து செயற்பட வேண்டி இருக்கிறது. எமக்கு தவறிய இடங்களை சரி செய்துகொள்ள வேண்டி இருக்கிறது.
அத்துடன் வீழ்ந்திருந்த தேசத்தை கட்டியெழுப்ப ரணில் விக்ரமசிங்க இருந்தமையிட்டு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள். தேசிய சொத்தாகவே ரணில் விக்ரமசிங்க எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறார். அந்த தேசிய சொத்தை நாங்கள் கவனமாக பாதுகாத்துக் கொள்ள வேண்டும். பாதுகாத்துக் கொள்ள தவறினால் நாங்கள் அனைவரும் கஷ்டத்தில் வீழ்ந்திடுவோம்.
அதனால் யாரையும் எந்த கட்சியையும் ஒதுக்கிவிட்டு இந்த பயணத்தை செல்ல முடியாது. அனைவரும் எமக்கு தேவை. மேலும் ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை தேசிய தலைவராக ஆட்சி செய்வதென்பது இந்த நாட்டை ஆசியாவின் சக்திவாய்ந்த நாடாக மாற்றுவார்.
ரணில் விக்ரமசிங்கவிடம் தேசிய நிகழ்ச்சி நிரல் மாத்திரமே இருக்கிறது. அது இந்த நாட்டை 2048ஆகும் போது வளர்ச்சியடைந்த நாடாக மாற்றுவதாகும். அத்துடன் நாடு தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நிலைமையில் சிலர் அவசரப்பட்டு தேர்தலை கோரி வருகின்றனர்.
இந்த நாட்டை மீண்டும் குழப்புவதற்கு, இவ்வாறு தேர்தலை கோரும் பின்னணில் சர்வதேசத்தின் தேவைப்பாடும் இருக்கலாம்.
நாட்டு மக்கள் தேர்தலை கோருவதில்லை. விவசாயத்துக்கு தேவையான உரத்தை கேட்கின்றனர். வாழ்க்கைச்செலவை குறைக்குமாறு கோருகின்றனர். ரணில் விக்ரமசிங்க மக்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றுவார்.
அதற்கு இடையூறு செய்ய வேண்டாம். அவரின் பயணத்துக்கு தடைகளை ஏற்படுத்த வேண்டாம். இவ்வாறு தடைகளை ஏற்படுத்துபவர்களுக்கு மக்கள் இடமளிக்கக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login
மறுமொழியை நிராகரி
ஒரு பின்னூட்டத்தை இட நீங்கள் கட்டாயம் உள்நுழைந்திருக்க வேண்டும்.
Pingback: ரணிலுக்குக் கொலை அச்சுறுத்தல் விடுத்த இளைஞன்: நீதிமன்றம் உத்தரவு - tamilnaadi.com
Pingback: எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் இடம்பிடிக்கவுள்ள பல ஆச்சரியங்கள் - tamilnaadi.com
Pingback: இலங்கை எதிர்நோக்குவது கடன் பொறி அல்ல - tamilnaadi.com
Pingback: பசிலின் முன்னேற்றத்தால் ஆட்டம் கண்ட ரணிலின் அரசியல் - tamilnaadi.com
Pingback: எரிபொருள் கையிருப்பு தொடர்பில் ஜனாதிபதி உத்தரவு - tamilnaadi.com
Pingback: அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிப்பு - tamilnaadi.com
Pingback: சம்பள அதிகரிப்பு : இரகசியம் பேணும் அரசு - tamilnaadi.com
Pingback: வரவு செலவுத் திட்டம்: இறுதிக்கட்ட தயாரிப்பு பணியில் ரணில் - tamilnaadi.com
Pingback: ரணில் உரையாற்றுகையில் சபையிலிருந்து வெளியேறிய சஜித் - tamilnaadi.com
Pingback: அதிபர் தேர்தலில் சுயேச்சை வேட்பாளராக ரணில் - tamilnaadi.com