இலங்கை
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்காமல் போகும் அபாயம்
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி கிடைக்காமல் போகும் அபாயம்
இலங்கைக்கு அடுத்த மாதம் கிடைக்கவுள்ள சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாம் தவணை திட்டமிட்டபடி கிடைக்காமல் போகலாம் என இலங்கை வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அமிந்த மெத்சில பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாத நிலவரத்திற்கமைய, சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்த்த இலக்குகளில் 39 சதவீதம் மாத்திரமே எட்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜூன் மாதத்தில் 55 சதவீதம் என்ற இலக்கில் சுமார் 33 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இந்த 33 சதவீதத்திற்குள் மோசடி மற்றும் ஊழல் குறைப்புச் சட்டம் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் சுதந்திரச் சட்டம் ஆகியவற்றின் நடைமுறையை உள்ளடக்கியுள்ள போதிலும், அவை ஜூன் மாதத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
செப்டெம்பர் மாதத்திற்குள் நிறைவேற்றப்பட வேண்டிய 77 சதவீத தொகையை பூர்த்தி செய்வது தற்போது கடும் சவாலாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஒவ்வொரு அரச நிறுவனங்களிலிருந்தும் வருடாந்த அறிக்கைகள் முறையாகப் பெறப்பட வேண்டும், ஆனால் 52 நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டிற்கான அறிக்கைகளை இதுவரை சமர்ப்பிக்கவில்லை.
சர்வதேச நாணய நிதியத்தின் பரிந்துரைளுக்கமைய, சர்வதேச நாணய நிதியுடனான ஒப்பந்தத்தை சந்திப்பதற்கான முன்னேற்றத்தை அளவிடுவதற்கு ஒரு தனி நிறுவனம் அமைக்கப்பட வேண்டும், ஆனால் இன்னும் நிறுவப்படவில்லை.
இலங்கைக்கு முதல் தவணை பணம் கிடைக்க 400 நாட்கள் சென்றன. ஆனால் பங்களாதேஷ் போன்ற நாடுகள் ஒரு மாதத்தில் முதல் தவணையை பெற முடிந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
You must be logged in to post a comment Login