இலங்கை
EPF – ETF நிதிகளுக்கு ஆபத்து
EPF – ETF நிதிகளுக்கு ஆபத்து
ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(ETF) மற்றும் அறக்கட்டளை நிதி(EPF) என்பவற்றை அரசாங்கம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினரும் தேசிய தொழிற்சங்க நிலையத்தின் அமைப்பாளருமான வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,
“தோட்டப்புறங்களில் வேலைசெய்யும் தொழிலாளர்கள், நகர்ப்புற பகுதிகளில் பணிபுரிபவர்கள், மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி(ETF) மற்றும் அறக்கட்டளை நிதி(EPF) என்பவற்றை அரசாங்கம் கொள்ளையடிக்க திட்டமிட்டுள்ளது.
இதற்கான தீர்வு கிடைக்கும்வரை நாங்கள் அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை முன்னெடுப்போம்.
அரசாங்கத்தினால் கொள்ளையடிக்கப்படும் பணம் எமது நட்டு மக்களுக்கு சொந்தமான ஒன்றாகும்.
எங்கள் நிதியைத் தொட எவருக்கும் உரிமையில்லை என்பதை ஒருமுறை எடுத்துக்கூற விரும்புகின்றேன்.” என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login