இலங்கை
பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! சிறுநீரக சத்திரசிகிச்சையில் உயிரிழந்த குழந்தையின் கடைசி ஆசை
பலரையும் சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்! சிறுநீரக சத்திரசிகிச்சையில் உயிரிழந்த குழந்தையின் கடைசி ஆசை
கொழும்பு ரிட்ஜ்வே லேடி சிறுவர் வைத்தியசாலையில் சிறுநீரக சத்திர சிகிச்சையின் பின்னர் குழந்தையொன்று உயிரிழந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த குழந்தை வைத்தியசாலையில் சிகிச்சையில் இருக்கும் போது தனது தாயாரிடம் கூறிய கடைசி ஆசைகளை தாய் பதிவு செய்துள்ள காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ளது.
குறித்த காணொளியில் குழந்தை விளையாட்டு துப்பாக்கி, சிவப்பு நிற கார் மற்றும் வைத்தியசாலையிலிருந்து சென்று தனது அண்ணாவுடன் விளையாட விரும்புவதாகவும் கூறியுள்ளார்.
இந்த காணொளி ஊடகங்களில் பரவிவருவதுடன், இந்த சம்பவம் மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சிறுநீரக சத்திரசிகிச்சையின் பின்னர் கிருமி தொற்று காரணமாக கொட்டாஞ்சேனையைச் சேர்ந்த 3 வயதும் 03 மாதங்களும் உடைய ஆண் குழந்தை ஒன்று நேற்று முன்தினம் (27) உயிரிழந்திருந்தது.
குழந்தைக்கு சிறுநீரகம் தொடர்பான நோய் நிலைமை இருப்பதாக வைத்தியர்கள் கண்டறிந்ததாகவும், வலது சிறுநீரகம் ஆரோக்கியமாக உள்ள நிலையில் இடது சிறுநீரகத்தை அகற்ற வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், அறுவை சிகிச்சையின் போது ஆரோக்கியமான வலது சிறுநீரகமும் அகற்றப்பட்டதாக வைத்தியர்கள் பின்னர் அறிவித்ததாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இரண்டு சிறுநீரகங்களும் இல்லாததால், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை வரை டயாலிசிஸ் சிகிச்சைக்கு பரிந்துரைக்கப்பட்ட குழந்தை, பின்னர் கிருமி தொற்று காரணமாக உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login