இலங்கை

தூக்கத்தை தொலைத்த மாணவிகள்!! வெளியான காரணம்

Published

on

தூக்கத்தை தொலைத்த மாணவிகள்!! வெளியான காரணம்

பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவிகளில் அறுபது வீதமானோர் பேன் தொல்லையால் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

தென் மாகாணத்திலுள்ள காலி நகரத்திலும் அதனை அண்டியுள்ள பாடசாலைகளிலும் பயிலும் மாணவிகளே பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது.

தலையில் பேன்கள் அதிகம் காணப்படுவதால் அவர்களின் படிப்பு, தூக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ருஹுணு பல்கலைக்கழக இணை சுகாதார விஞ்ஞான பீட மாணவர்கள் மற்றும் காலி மாவட்ட சுகாதார சேவைகள் அலுவலக அதிகாரிகள் இணைந்து காலி நகரில் உள்ள மாணவிகளிடம் இந்த ஆய்வை மேற்கொண்டதாக சமூக மருத்துவ நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார் .

கேள்வித்தாளை முன்வைத்து நடத்தப்பட்ட இந்த ஆய்வின்படி, 60% மாணவிகள் அதிகப்படியான தலை பேன்களால் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்வது தெரியவந்துள்ளது.

தலையில் உள்ள எண்ணெய் பசையை சுத்தம் செய்யாமை, தலையில் தங்கியிருக்கும் தூசி, தலையை சரியாக கழுவாதது போன்ற விடயங்களே தலையில் பேன்கள் வேகமாக பரவுவதற்கான காரணங்களாக சுட்டிக்காட்ட முடியும் என இந்த ஆய்வில் கலந்து கொண்ட தோல் நோய் வைத்தியர் டொக்டர் அச்சல லியனகே தெரிவித்தார்.

எனினும், தென் மாகாண சுகாதார மற்றும் கல்வி அதிகாரிகள் இந்த பிரச்சினையை அவசரமாக ஆராய்ந்து நிலைமையை சரிசெய்ய திட்டமிட்டுள்ளதாக சமூக நிபுணர் டொக்டர் அமில சந்திரசிறி மேலும் தெரிவித்துள்ளார்

 

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version