இலங்கை

வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ வைத்த இலங்கையர்

Published

on

வெளிநாட்டு குடும்பத்தை நெகிழ வைத்த இலங்கையர்

இலங்கைக்கு சுற்றுலா மேற்கொண்ட மாலைத்தீவு குடும்பத்தினரை முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் நெகிழ வைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கல்கிஸ்ஸ மிஹிது மாவத்தையில் உள்ள முச்சக்கரவண்டி தரிப்பிடத்தில் வாடகைக்கு முச்சக்கர வண்டி சேவை பெற்ற மாலைதீவு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் முச்சக்கரவண்டியில் தங்கள் பையை மறந்து விட்டு சென்றுள்ளனர்.

அவர்கள் மறந்து விட்டு சென்ற பைக்குள் லட்சக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நாணய ஆவணங்கள், கடவுச்சீட்டுகள் அடங்கிய பையை உரிமையாளரை கண்டுபிடித்து ஒப்படைப்பதற்கு முச்சக்கர வண்டி சாரதி செயற்பட்டுள்ளார்.

மாலைத்தீவைச் சேர்ந்த தந்தை, தாய், மகள், மகன் ஆகிய நால்வரும் சில வாரங்கள் ஓய்வு எடுப்பதற்காக மிஹிது மாவத்தையில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தனர்.

அதற்கமைய, கடந்த காலை குடும்பத்தினர் அனைவரும் பல பைகளுடன் வந்து பிரசாத் ரொட்ரிகோ என்பவரின் முச்சக்கரவண்டியைப் பெற்றனர். பயணத்தின் முடிவில், ஒரு பையை மறந்து விட்டது சென்றுள்ளனர்.

அதனை அவதானிக்காமல் வந்த சாரதி சிறிது நேரத்தின் பின்னர் கவனித்துள்ளார்.

அதன் பின்னர் மீண்டும் அந்த குடும்பத்தை தேடி சென்று பையை ஒப்படைத்துள்ளார். பணப்பை சோதனையிட்ட வெளிநாட்டவர் இலங்கையரின் நேர்மையை பாராட்டி பரிசுகளையும் வழங்கியுள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version