இலங்கை

நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

Published

on

நடிகைகளை அவுஸ்திரேலியா அழைத்துச் சென்றதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம்

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் பிரபல நடிகைகளை அவுஸ்திரேலியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் மகேன் ரட்டட்ட தெயக் அமைப்பின் தலைவர் சஞ்சய சஞ்சய் மகாவத்த இந்த விடயங்களை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், கடந்த 2022ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண ரி20 போட்டி தொடரில் இவ்வாறு நடிகைகள் அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அண்மையில் வெளியிடப்பட்டுள்ள கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையில் இந்த தகவல்கள் தெரியவந்துள்ளன.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் தலைவர் ஷம்மி சில்வா ஐந்து நடிகைகளை கிரிக்கெட் நிர்வாகத்தின் செலவில் வெளிநாட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் ஷம்மி சில்வாவுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலியாவிற்கு பயணம் மேற்கொண்ட நடிகைகள் பற்றிய பெயர் விபரங்களும் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

குற்ற விசாரணை திணைக்களத்திடம் மகேன் ரட்டட தெயக் அமைப்பினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னதாக மூன்று நடிகைகளை ஷம்மி சில்வா கிரிக்கெட் சபை பணத்தில் வெளிநாடு அழைத்துச் சென்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டதாகவும், கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் இந்த எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

1 Comment

  1. Pingback: புதிய அணு ஆயுத நீா்முழ்கிக் கப்பல்: வடகொரியா அறிவிப்பு - tamilnaadi.com

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version