இலங்கை

டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம்! அதிரடி தீர்மானம்

Published

on

டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம்! அதிரடி தீர்மானம்

டயானா கமகேவின் குடியுரிமை விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட நீதிப்பேராணை மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் அடங்கிய அமர்வு முன்னிலையில் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தீர்மானித்துள்ளது.

இந்த மனுவின் மூலம், சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என அறிவிக்க உத்தரவிடுமாறு மனுதாரர் கோரியுள்ளார்.

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் (தலைவர்) நிஸ்ஸங்க பந்துல கருணாரத்ன மற்றும் நீதியரசர் எம்.ஏ.ஆர் மரிக்கார் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதியரசர்கள் கொண்ட இந்த மனு தொடர்பில் வெவ்வேறான தீர்ப்புக்களை வழங்கியது.

இதனையடுத்தே மனுவை மூன்று பேரடங்கிய நீதியரசர்கள் குழு முன்னால் விசாரணை செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானிய பிரஜை என்பதால் டயானா கமகே நாடாளுமன்ற உறுப்பினராக இருக்க தகுதியற்றவர் என்று உத்தரவிடுமாறு கோரி சமூக ஆர்வலர் ஓசல ஹேரத் இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version