இலங்கை
இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ முறை
இலங்கையில் அறிமுகமாகவுள்ள யு.பி.ஐ முறை
சிங்கப்பூர், பிரான்ஸ் வரிசையில் தற்போது இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கு புதிய ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்தியாவில் யு.பி.ஐ பரிவர்த்தனை முறை ஒவ்வொரு ஆண்டும் பிரபலமடைந்து வருகிறது. யு.பி.ஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையும், மதிப்பும் தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருகிறது.
சிறு வியாபாரிகள் முதல் பெரிய வணிக வளாகங்கள் வரை எல்லா இடங்களிலும் யு.பி.ஐ பரிவர்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன.
இது மட்டுமல்லாமல், வெளிநாடுகளுக்கு இடையே யு.பி.ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்த ரிசர்வ் வங்கியும், இந்திய அரசும் முயற்சித்து வருகின்றன.
ஏற்கெனவே சிங்கப்பூர், பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே யு.பி.ஐ பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான வசதி நடைமுறையில் இருக்கிறது.
இந்தியா – இலங்கை இடையே யு.பி.ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கான இந்த ஒப்பந்தத்தால் நிதிநுட்ப இணைப்பு அதிகரிக்கும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உத்தியோகப்பூர்வ இந்திய விஜயத்தை மேற்கொண்ட போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login