இலங்கை
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்கள்!
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது வடக்கில் கண்டுபிடிக்கப்படும் மனித புதைகுழிகள் தொடர்பில் உரிய தரப்பினர் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த மனிதப் புதைகுழிகளுடன் இலங்கை இராணுவத்தை தொடர்புப்படுத்தவே தமிழ் அரசியல்வாதிகள் முயற்சிக்கின்றார்கள்.
தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள்
தமிழர்களை கொல்ல வேண்டிய தேவை இராணுவத்திற்கு இல்லை. இலங்கை இராணுவத்தினர் யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் எதுவும் இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
இலங்கையில் யுத்தக் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்று சர்வதேச நிபுணர்கள் அறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
பிரபாகரனிடம் பணயக் கைதிகளாக இருந்த தமிழர்களை பாதுகாக்க இராணுவத்தினர் உயிர்த் தியாகம் செய்தார்கள். முல்லைத்தீவு பகுதியில் 600 பொலிஸாரை விடுதலை புலிகள் அமைப்பினர் படுகொலை செய்தனர். இது யுத்தக் குற்றம் இல்லையா?
யார் மனிதப் படுகொலை செய்தது. விடுதலைப் புலிகளே மனித படுகொலை செய்தார்களே தவிர இராணுவத்தினர் அல்ல. தமிழர்களை பாதுகாத்து நாங்கள் யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்தோம் என தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login