இலங்கை
இலங்கையில் வைத்தியசாலைகளில் மர்மம் – 4 மாத குழந்தை மரணம்
இலங்கையில் வைத்தியசாலைகளில் மர்மம் – 4 மாத குழந்தை மரணம்
குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 4 மாத குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
04 மாதங்கள் நிறைவடைந்த பின்னர் வழங்கப்படும் தடுப்பூசி செலுத்தப்பட்டு ஒரு நாளின் பின்னர் திடீர் சுகவீனம் காரணமாக குழந்தை உயிரிழந்துள்ளது.
நேற்று முன்தினம் குறித்த குழந்தைக்கு படுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் 04 மாத தடுப்பூசி போடப்பட்டது.
தடுப்பூசி போட்ட பிறகு குழந்தைக்கு பொதுவான காய்ச்சலுக்கான அறிகுறிகளும் தென்பட்டது, தேவையான சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும், நேற்று காலை வரை உடல்நிலை மோசமடைந்தது.
உடனடியாக குழந்தையை குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்றோர் நடவடிக்கை எடுத்த போதிலும், குழந்தை ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
படுவஸ்நுவர மேற்கு சுகாதார வைத்திய பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் வசிக்கும் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
குழந்தையின் சடலம் பிரேத பரிசோதனைக்காக குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் இருந்து குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இன்றைய தினம் பிரேத பரிசோதனையின் பின்னரே தடுப்பூசி மரணத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதா என்பது குறித்து முடிவெடுக்க முடியும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
You must be logged in to post a comment Login