இலங்கை
ரணிலின் இரகசிய தகவலையடுத்து மகிந்த மாயம்
ரணிலின் இரகசிய தகவலையடுத்து மகிந்த மாயம்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் அவரின் குடும்பத்தின் பலம் பொருந்தியவர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இரகசிய செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
இரகசியமான செய்தி குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை.
ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகளால், இது ஒரு சக்திவாய்ந்த செய்தியாக இருக்கலாம் என்று பலரால் நம்பப்படுகிறது.
அந்தச் செய்தி கிடைத்தவுடன் மகிந்த திடீரென காணாமல் போனதே அதற்குக் காரணமாகும். ரணிலின் இந்தச் செய்திக்குப் பின்னர் மகிந்த அதிகம் வெளியே வரவில்லை என்று பலர் கூறுகின்றனர்.
மகிந்தவைத் தவிர, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ச ஆகியோருக்கும் இந்தச் செய்தி கிடைத்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
எனினும் இந்தச் செய்தி கிடைத்ததும் மகிந்த சற்று மனவருத்தமடைந்துள்ளதாக அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்துள்ளனர்.
மொட்டு கட்சி செயற்படும் விதம், அரசாங்கம் செயற்படும் விதம், குறிப்பிட்ட நெருக்கமானவர்கள் நடந்துகொள்ளும் விதம் ஆகியவற்றால் விரக்தியில் இருந்த மகிந்தவுக்கு ஜனாதிபதியின் செய்தி மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
You must be logged in to post a comment Login