இந்தியா
ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்
ஈழத்தமிழர்களின் பிரச்சினை தொடர்பாக மோடிக்கு கடிதம்
இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஜுலை மாதம் 21 ஆம் திகதி கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.
இந்நிலையில் இந்திய பிரதமருக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஒரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அந்த கடிதம் குறித்து விளக்கமளித்த அவர்,
இந்த கடித்தில் இந்திய இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்ட போது ஆறு தமிழ் இயக்கங்களும் வடக்கு கிழக்கு இரண்டாக பிரிக்கப்படுகின்ற விடயத்தை சுட்டிக்காட்டி கடும் ஆட்சேபனைகளை தெரிவித்திருந்தது.
இதனையடுத்து இந்தியா கொடுத்த “ஒருபோதும் கிழக்கு மாகாணத்தில் நடைபெறுகின்ற வாக்கெடுப்பை நடத்தாமல் பார்த்துக்கொள்வோம்” என்ற வாக்குறுதியின் அடிப்படையில் தான் இயக்கங்கள் அதை ஏற்றுக்கொண்டு ஆயுதக்கையளிப்பை செய்தார்கள்.
இதேபோல் 13ஆம் திருத்தத்தின் போது கொண்டுவரப்பட்ட காணி பொலிஸ் அதிகாரங்கள் 36 ஆண்டுகள் கடந்தும் அது நடைமுறைப்படுத்தப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் பிண்ணனியில் தமிழ் பகுதிகளில் ஆக்கிமிப்புக்கள் அதேபோல் இந்துகோவில்கள் அழிக்கப்படுகின்றன.
இந்த விடயங்களை முழுமையாக தொகுத்து கடிதமாக அனுப்பியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login