இலங்கை

ஒரே வாரத்தில் பாரிய சரிவை சந்தித்தது இலங்கை ரூபா! உயரும் டொலரின் பெறுமதி

Published

on

ஒரே வாரத்தில் பாரிய சரிவை சந்தித்தது இலங்கை ரூபா! உயரும் டொலரின் பெறுமதி

இலங்கையில், தொடர்ந்தும் உயர்ந்து வந்த ரூபாவின் பெறுமதி கடந்த ஒரு வாரமாக கடுமையான வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.

கடந்த காலங்களில், அதிகம் செயற்றிறன் கொண்ட நாணயமாக காணப்பட்ட இலங்கை ரூபா விரைவில் வீழ்ச்சியடையக் கூடும் என பொருளாதார நிபுணர்கள் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த நிலையில் கடந்த ஐந்து நாட்களும் அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்து வருவதுடன், நேற்று முன்தினத்துடன்(13.07.2023) ஒப்பிடும் போது நேற்றையதினம்(14.07.2023) ரூபாவின் பெறுமதி சடுதியாக வலுவிழந்தது.

டொலருக்கு நிகராக மாத்திரம் இன்றி பிரித்தானிய பவுண்ட், யூரோ, கனேடிய டொலர் என பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவி்ன் பெறுமதி பாரிய சரிவை சந்தித்து வருகின்றது.

அமெரிக்க டொலர்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலரின் பெறுமதியானது கடந்த ஐந்து நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி, 304.02 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 318.23 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) அமெரிக்க டொலரின் கொள்வனவு பெறுமதி, 310.49 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 324.67 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் டொலரின் விற்பனை பெறுமதியானது, 06.44 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 06.47 ரூபாவால் அதிகரித்துள்ளது.

கனேடிய டொலர்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, கனேடிய டொலரின் பெறுமதியும் கடந்த ஐந்து நாட்களில் உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று கனேடிய டொலரின் கொள்வனவு பெறுமதி, 226.74 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 240.83 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) கனேடிய டொலரின் கொள்வனவு பெறுமதி, 235.46 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 249.34 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் கனேடிய டொலரின் விற்பனை பெறுமதியானது, 08.51 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 08.72 ரூபாவால் அதிகரித்துள்ளது.

யூரோ

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, யூரோவின் பெறுமதியானது கடந்த ஐந்து நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று யூரோவின் கொள்வனவு பெறுமதி, 331.60 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 350.03 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) யூரோவின் கொள்வனவு பெறுமதி, 347.62 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 366.06 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் யூரோவின் விற்பனை பெறுமதியானது, 16.03 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 16.02 ரூபாவால் அதிகரித்துள்ளது.

பவுண்ட்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, பிரித்தானிய பவுண்டின் பெறுமதியானது கடந்த ஐந்து நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று பிரித்தானிய பவுண்டின் கொள்வனவு பெறுமதி, 388.30 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 408.92 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) பிரித்தானிய பவுண்டின் கொள்வனவு பெறுமதி, 406.68 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 427.31 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் பிரித்தானிய பவுண்டின் விற்பனை பெறுமதியானது, 18.39 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 18.38 ரூபாவால் அதிகரித்துள்ளது.

சிங்கப்பூர் டொலர்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, சிங்கப்பூர் டொலரின் பெறுமதியானது கடந்த ஐந்து நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று சிங்கப்பூர் டொலரின் கொள்வனவு பெறுமதி, 224.04 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 237.14 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) சிங்கப்பூர் டொலரின் கொள்வனவு பெறுமதி, 234.27 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 247.30 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் சிங்கப்பூர் டொலரின் விற்பனை பெறுமதியானது, 10.16 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 10.23 ரூபாவால் அதிகரித்துள்ளது.

அவுஸ்திரேலிய டொலர்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அவுஸ்திரேலிய டொலரின் பெறுமதியானது கடந்த ஐந்து நாட்களில் மிகப்பெரிய உயர்வை பதிவு செய்துள்ளது.

கடந்த 10.07.2023 ஆம் திகதியன்று அவுஸ்திரேலிய டொலரின் கொள்வனவு பெறுமதி, 201.42 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 214.02 ரூபாவாகவும் பதிவாகியிருந்த நிலையில், நேற்றையதினம்(14.07.2023) அவுஸ்திரேலிய டொலரின் கொள்வனவு பெறுமதி, 212.64 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 225.26 ரூபாவாகவும் பதிவாகியிருந்தது.

இதன்படி, இந்த வாரத்தின் இதுவரையான நாட்களில் அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதியானது, 11.24 ரூபாவால் அதிகரித்துள்ளது. அதேசமயம், கொள்வனவு பெறுமதியானது 11.22 ரூபாவால் அதிகரித்துள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version