இந்தியா
யாழ் இந்திய பயணிகள் போக்குவரத்து சேவை குறித்து வெளியான தகவல்
யாழ் இந்திய பயணிகள் போக்குவரத்து சேவை குறித்து வெளியான தகவல்
காங்கேசன்துறை துறைமுகத்தின் ஊடாக இந்தியாவிற்கு பயணிகள் மற்றும் சரக்குகள் ஆகிய இரண்டிற்கும் போக்குவரத்து சேவைகளை ஆரம்பிக்கும் புதிய திட்டம் இலங்கை அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டது.
இது தொடர்பாக திங்கட்கிழமை (ஜூலை 10) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர,
திட்டத்தின் மூலம் இரு நாடுகளுக்குமிடையில் மக்கள் இலகுவாக பயணிக்க முடியும் எனவும், ஒவ்வொருவரும் 100 கிலோ பயண பொதிகளை எடுத்து செல்லலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த திட்டத்திற்கு இந்திய அரசாங்கம் இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை என்றும், இதனால் திட்டத்தை செயல்படுத்துவது மேலும் ஆறு மாதங்கள் தாமதமாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
You must be logged in to post a comment Login