இலங்கை

இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

Published

on

இறக்குமதி தடை குறித்து மத்திய வங்கி ஆளுநரின் அறிவிப்பு

நாட்டின் பொருளாதார மீட்சியை இரண்டாம் அரையாண்டில் காணலாம் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நிலைமையானது இனிவரும் காலங்களிலும் தொடர்வது உறுதிப்படுத்தப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிஎன்பிசிக்கு கருத்து தெரிவிக்கையில் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், நுகர்வோர் அத்தியாவசியப் பொருட்களை தட்டுப்பாடு இன்றி பெறுவதற்கு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. சில பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளும் தளர்த்தப்பட்டுள்ளன.

முன்னைய நிலவரத்தையும் தற்போதைய நிலைமையையும் ஒப்பிட்டு பார்க்கும் போது தற்போது எந்தவொரு அத்தியாவசிய உணவுப் பொருளுக்கும் தட்டுப்பாடு இல்லை. அத்துடன் எரிபொருள் மற்றும் எரிவாயு என்பவற்றின் விலைகளும் குறைந்துள்ளன.

பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ள போதிலும் எதிர்காலத்தில் மேலும் சிலவற்றின் இறக்குமதி தடைகளை நீக்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை இந்த ஆண்டு முழுவதும் ரூபாவின் மதிப்பு வலுவடைந்து வருகிறது. பங்குச் சந்தை விலைக் குறியீடும் நேர் பெருமானத்தில் இருப்பதைக் காணலாம்.

எனவே பொருளாதாரத்தின் மீட்சியை ஆண்டின் இரண்டாம் பாதியில் காணலாம் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் அண்மையில் சுமார் 300 வரையிலான பொருட்களுக்கு இறக்குமதி தடை நீக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் வாகன இறக்குமதி தடையை நீக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த போதும் அதற்கான முடிவினை எடுக்கும் சாதகமான சூழல் தற்போது இல்லை எனவும், இந்த விடயம் தொடர்பில் தீவிரமாக ஆராய வேண்டியிருப்பதாகவும் நிதி அமைச்சு தரப்பிலிருந்து கூறப்பட்டமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version