இலங்கை

யாழில் அதிகரித்துள்ள டெங்கு அபாயம்!

Published

on

அதிகரித்துள்ள டெங்கு அபாயம்!

யாழ்.மாவட்டத்தில் 1843 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் என வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் இன்று (04.07.2023) நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இத தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,”வடக்கு மாகாணத்தில் கடந்த ஆறு மாதங்களில் 1843 பேர் டெங்கு நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளார்கள். இதுவரையில் தென்பகுதியில் இருந்து வந்த ஒருவர் மாத்திரம் டெங்கு தாக்கத்தினால் இறப்புக்கு உள்ளாகி இருக்கின்றார்.

இது தவிர வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்.மாவட்டத்தில் 1491 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 65 பேரும், மன்னார் மாவட்டத்தில் 77 பேரும், வவுனியா மாவட்டத்தில் 106 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 104 பேருமாக மொத்தமாக 1843 பேர் டெங்கு நோய் தாக்கத்துக்குள்ளாகியுள்ளார்கள்.

அத்துடன் வடக்கு மாகாணத்தில் ஏனைய மாகாணங்களை ஒப்பிடுகையில் யாழ்.மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன்போது யாழ்.நகர பகுதியான நல்லூர் – கரவெட்டி பகுதிகளில் டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுவதுடன் இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது.

இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலும் இந்த டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகிறது. குறிப்பாக கொழும்பு கம்பஹா மாவட்டங்களில் டெங்கு தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றது.

ஏனைய நகரங்களிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். யாழ்ப்பாணம் மாவட்டத்திலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

டெங்கு தொற்றை குறைப்பதற்கு குறிப்பாக டெங்கு பரப்பும் நுளம்புகளை இல்லாது ஒழிக்க வேண்டும்.

அந்த நுளம்புகள் குறிப்பாக பல்வேறு இடங்களில் பெருகி அவை டெங்கு நோயை பரப்புவதனால் டெங்கு நோய் தாக்கமானது யாழ்ப்பாண மாவட்டத்தில் அதிகளவில் ஏற்படுகின்றது.

எனவே டெங்கு தொற்றினை தவிர்ப்பதற்கு பொதுமக்கள் தமது சுற்றாடலை சுத்தமாக வைத்திருந்து பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version