இலங்கை
ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
ரணிலின் திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு
கொழும்பு துறைமுகத்தை 2048ஆம் ஆண்டுக்கு முன்னர் வெளிநாட்டவர்களுக்கு விற்று நாட்டை அபிவிருத்தி செய்ய வேண்டும் என்று பொய் கனவு காண வேண்டாம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கொழும்பு பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வலியுறுத்தியுள்ளார்.
கொழும்பில் நேற்று (02.07.2023) இடம்பெற்ற ஆராதனை நிகழ்வின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
இதன் போது மேலும் கருத்து தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார சிக்கலினால் மக்கள் தமது உடைமைகளை இழக்கின்றனர். இது 2024 வரை நீடித்தால் இந்த நாடு அழிந்துவிடும்.
நாட்டின் பொருளாதார சிக்கலினால் கொழும்பு துறைமுகத்தின் ஒரு பகுதி பல்வேறு நாடுகளுக்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது.
இப்போது ஏனைய பகுதிகளையும் விற்பதற்கான திட்டங்கள் தயாரிக்கப்படுகின்றன. நம் அரசாங்கம் எதைப் பற்றி கனவு காண்கிறது? இதன் இலக்கு என்ன?
முத்துராஜவலை முழுவதையும் அழித்து, வெளியாட்களுக்கு விற்று, பணம் சம்பாதித்து, சாப்பிட்டு, குடித்து, உல்லாசமாக வாழுகின்றார்கள்.
ஆனால், நாட்டு மக்களுக்கு எஞ்சியிருப்பது துன்பம் மட்டுமே. இதை ஒருகாலமும் அனுமதிக்க முடியாது என பேராயர் தெரிவித்தார்.
You must be logged in to post a comment Login