இலங்கை

யாழ்.தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம் !

Published

on

யாழ்.தையிட்டியில் மீண்டும் போராட்டம் ஆரம்பம் !

தையிட்டி விகாரைக்கு அண்மையில் மீண்டும் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது.

தையிட்டியில் மீண்டும் போராட்டம் முன்னெடுப்பதற்கு, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்த நிலையிலேயே தற்போது போராட்டம் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நாளைய(03.07.2023) போயா தினம் என்பதால் குறித்த விகாரையில் வழிபாடுகள் இடம்பெறவுள்ள நிலையில் குறித்த போராட்டம் இன்றையதினம் ஆரம்பமாகியுள்ளது.

 

இந்த போராட்டமானது நாளையதினமும் தொடரவுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

தையிட்டி விகாரைக்கு அண்மையில் வழமை போன்று போராட்டத்தில் ஈடுபடுவதற்கு ஒன்று கூடுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்தப் போராட்டமானது இன்று (02.07.2023) மற்றும் நாளை (03.07.2023) ஆகிய இரண்டு நாட்கள் இடம்பெறவுள்ளது.

அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

தையிட்டியில் தனியார் காணிகளை ஆக்கிரமித்து சட்டவிரோதமான முறையில் இராணுவத்தினரால் விகாரை அமைக்கப்பட்டுள்ளது.

அந்த சட்டவிரோத கட்டுமானத்திற்கு எதிராகவும் தனியார் காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இந்த நிலையில், இன்றைய தினம் (02.07.2023) ஞாயிற்றுக்கிழமை பி.ப 3.00 மணிக்கு அனைவரையும் தையிட்டி விகாரைக்கு அண்மையில் வழமையாகப் போராட்டம் நடத்துவதற்கு நீதிமன்றினால் அனுமதிக்கப்பட்ட இடத்தில் ஒன்று கூடுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என செல்வராஜா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version