அரசியல்

யாழின் பல பகுதிகளுக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி!! 

Published

on

முன்னாள் ஜனாதிபதி!

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனின் அழைப்பின் பேரில் யாழ்ப்பாணத்துக்கான 3 நாள் விஜயம் மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி இன்று (01.07.2023) சனிக்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் ரி.சத்தியமூர்த்தி வரவேற்றுள்ளார்.

வைத்தியசாலை செயற்பாடுகளையும், விடுதிகளையும் பார்வையிட்ட முன்னாள் ஜனாதிபதி, நோயாளர்கள், வைத்தியசாலை ஊழியர்களோடும் கலந்துரையாடினார்.

இதன்போது, அவர் சுகாதார அமைச்சராக இருந்த காலப்பகுதியில் அடிக்கல் நாட்டப்பட்டு ஜனாதிபதி பதவிக் காலத்தில் திறந்து வைக்கப்பட்ட வைத்தியசாலை கட்டடத் தொகுதியையும் பார்வையிட்டார்.

அதேவேளை, இன்று காலையில் பிறந்த ஆண் குழந்தையொன்றுக்கும் தனது ஆசீர்வாதங்களை மைத்திரிபால வழங்கினார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் – குப்பிளான் பகுதியில் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் விவசாயிகளை சந்தித்து கலந்துரையாடினார்.

இயந்திரம் மூலம் மேற்கொள்ளப்பட்ட வெங்காயம் செயற்பாட்டையும் பார்வையிட்டு இயந்திரத்தால் வெங்காயத்தையும் நாட்டினார். அத்தோடு மிளகாய் செய்கையை மேற்கொள்ளும் விவசாய தோட்டங்களை பார்வையிட்டு கலந்துரையாடினார்.

விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக யாழ் மாவட்ட கமக்கார அமைப்பின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

இந்நிகழ்வில் வெங்காயத்தினை நடுகை செய்யும் இயந்திரத்தை கண்டுபிடித்தவர்களும் முன்னாள் ஜனாதிபதியால் கெளரவிக்கப்பட்டனர்.

மேலும், காலை மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணம் பொதுச் சந்தைக்கு விஜயம் செய்தார்.

யாழ்ப்பாணத்தின் அடையாளமாக விளங்கும் உணவுப்பொருட்களான பனை உற்பத்திப் பொருட்கள், கருவாடு, பழங்கள் உள்ளிட்டவற்றை கொள்வனவு செய்யும் ஆர்வத்தோடு மேற்கொண்டிருந்தார்.

இதன்போது சந்தைத் தொகுதி வியாபாரிகள், பொது மக்களையும் சந்தித்த அவர் சிநேகபூர்வமான உரையாடல்களில் ஈடுபட்டார்.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version