இலங்கை
ரணிலின் தந்திரத்தை அம்பலப்படுத்திய முக்கியஸ்தர்
தேசிய கடன்களை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டிற்கு எதிராக அணி திரளுமாறு பிவிதுரு ஹெல உருமய கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், முறைகேடுகள் நிறைந்த அஸ்வெசும நலன்புரி செயற்திட்டத்திற்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்பி இரகசியமான முறையில் தேசிய கடன் மறுசீரமைப்பை நாடாளுமன்றத்தின் ஊடாக நிறைவேற்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார்.
நாட்டிற்கு எதிரான ஒரு தீர்மானத்தை செயற்படுத்தும் போது மக்களின் கவனத்தை திசைத்திருப்ப பிறிதொரு விடயத்தை முன்னிலைப்படுத்துவது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு கைவந்த கலை என அவர் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளார்.
You must be logged in to post a comment Login