இலங்கை
வாய் திறக்க மறுக்கும் டக்ளஸ்!! சுமந்திரன் குற்றச்சாட்டு
வடக்கின் எதிர்கால நீர் வளத்துக்கு பொருத்தமற்ற அபிவிருத்தித் திட்டமான நயினாமடு சீனித் தொழிற்சாலையை தமிழ் அரசுக் கட்சி எதிர்க்கும் என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட இவ்வளவு பெரிய நிலம் ஒதுக்கப்படுவது குறித்து வாய் திறக்கவில்லை” என குற்றம் சுமத்தியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், சீனித் தொழிற்சாலைக்கான நில விநியோகம் தொடர்பிலே ஜனாதிபதியை சில தமிழ் தரப்புக்கள் தனியாகச் சந்தித்தன என்று பத்திரிகை ஒன்றில் செய்தி வெளியாகியிருந்தது.
மேலும், இந்தச் சீனி தொழிற்சாலைப் பிரதிநிதிகள், தேசிய முதலீட்டுச் சபையின் பிரதிநிதிகள் மற்றும் வவுனியா மாவட்ட அரச அதிபர் ஆகியோருடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த மே -18 அன்று சூம் மூலம் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலில் ரெலோவின் பேச்சளார் கலந்துகொண்டார் எனவும் குறித்த பத்திரிக்கை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தி வெளியாகிய போதும் அந்தக் கட்சியின் தலைவர்கள் உள்ளூரில் வாயைத் திறக்கவில்லை.
இந்தத் தொழிற்சாலைக்கு நிலம் வழங்கும் தீர்மானம் மேற்கொண்ட அதே அமைச்சரவைக் கூட்டத்தில் இருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூட இவ்வளவு பெரிய நிலம் ஒரு தொழிற்சாலைக்காக ஒதுக்கப்படுவது குறித்து வாய் திறக்கவில்லை.
You must be logged in to post a comment Login