இலங்கை

இலங்கை ‘மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றவாளி’ என்பதை வெளிப்படுத்துங்கள்- ஈழத்தமிழர் பேரவை வலியுறுத்தல்

Published

on

எதிரான குற்றவாளி என்பதை வெளிப்படுத்துவதுடன், சித்திரவதைகளால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் புனர்வாழ்வு பெறுவதற்கு அவசியமான உதவிகளை வழங்க முன்வருமாறு ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்புக்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராகப் போராடும் சர்வதேச கட்டமைப்புக்களிடம் ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை வேண்டுகோள்விடுத்துள்ளது.

சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவு தொடர்பான சர்வதேச தினத்தை (26) முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே ஐக்கிய இராச்சியத்தின் ஈழத்தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு:

இம்முறை சித்திரவதைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்துலக ஆதரவு நாள் (26) ‘சித்திரவதை – மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றம்’ என்ற தொனிப்பொருளில் நினைவுகூரப்படுகின்றது. இருப்பினும் சித்திரவதைகளையே அரசியல் கொள்கையாக்கி, ஈழத்தமிழர்களை இனவழிப்புக்கு உள்ளாக்கிவரும் இலங்கை அரசாங்கம் சர்வதேச சட்டங்கள் மீதான எவ்வித அச்சமுமின்றி தினந்தோறும் மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டுவருகின்றது. எனவே ஐக்கிய நாடுகள் சபையின் கிளை அமைப்புக்களும், சித்திரவதைகளுக்கு எதிராகப் போராடும் சர்வதேச கட்டமைப்புக்களும் கூட்டிணைந்து இலங்கை மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றவாளி என்பதை வெளிப்படுத்தவேண்டும் என்றும், பாதிக்கப்பட்ட தமிழ்மக்கள் புனர்வாழ்வு பெறுவதற்கு உதவ முன்வரவேண்டும் என்றும் உலகெங்கிலும் உள்ள ஈழத்தமிழ் மக்கள் வலியுறுத்துகின்றனர்.

அதேவேளை உள்நாட்டுப்போரின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உரியவாறான விசாரணைகளை முன்னெடுப்பதில் இலங்கை விருப்பமின்றி இருப்பதனால், பாதிக்கப்பட்ட தரப்பினர் வேறு இடங்களில் நீதி விசாரணையைக் கோரவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். குறிப்பாக தற்போது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவருகின்றது. இருப்பினும் முன்னைய ஆணைக்குழுக்களின் பரிந்துரைகள் எவையும் கவனத்திலெடுக்கப்படாத பின்னணியில், இந்நடவடிக்கைகள் நீதியை நிலைநாட்டுவதற்காகவன்றி நீதியை ஓரங்கங்கட்டுவதற்கான முயற்சியாகவே அமைந்துள்ளது.

ஆகவே இலங்கையானது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கு முன்னதாக உரோம் எழுத்துருவச்சட்டத்தில் கையெழுத்திட்டு, அதன் நடவடிக்கைகளை ஏற்று, அனைத்துல நீதிமன்றத்தின் அதிகார வரம்பெல்லைக்குள் கொண்டுவரப்படவேண்டும் என்று சர்வதேச மன்னிப்புச்சபையினால் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் முன்வைக்கப்பட்ட பரிந்துரையை நாம் மீளவலியுறுத்துகின்றோம் என்று அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version